மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

நீதிபதி லோயா மரணம் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

நீதிபதி லோயா மரணம் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி திருமணம் ஒன்றிற்காக நாக்பூர் சென்றிருந்த சமயத்தில் திடீரென அகால மரணமடைந்தார். மாரடைப்பால் நீதிபதி மரணமடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் நீதிபதியின் குடும்பத்தினர்,” லோயாவின் மரணம் இயற்கைக்கு மாறானது என்றும் இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தனர்.

இந்தச் செய்தி வெளியான பத்து நாட்களுக்குப் பிறகு பல்வேறு தரப்பில் இருந்தும் நீதிபதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1,700 உறுப்பினர்களை கொண்ட லதூர் பார் அசோசியேஷனை சேர்ந்த 150 வழக்கறிஞர்களும், ஓய்வுபெற்ற மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பி.எச் மர்லபல்லே, முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா ஆகியோரும் நீதி விசாரணை கோரினர்.

மர்ம மரணம் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடற்படை முன்னாள் தலைவர் எல்.ராம்தாஸ் முன்னாள் பாஜக தலைவர் அருண் ஷோரி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியோரும் வலியுறுத்தினர்.

இருப்பினும், கடந்த நவம்பர் 29 அன்று, லோயாவின் மகன், தனது தந்தையின் மரணத்தின் சூழ்நிலையைப் பற்றி எந்தவித புகாரும் அல்லது சந்தேகமும் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் விசாரணை ஆணையத்தின் நேர்மை குறித்து எந்த வித சந்தேகமும் கிடையாது என்றும் எனது தந்தை மாரடைப்பால் தான் இறந்திருக்கக் கூடும் என்று தற்போது நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நீதிபதியின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணையைத் தொடங்கி மர்மத்தை விலக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 ஜன 2018