மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

பொங்கல்: ஊருக்குச் செல்ல முடியுமா?

பொங்கல்: ஊருக்குச் செல்ல முடியுமா?

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

6ஆவது நாளாகப் போராட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் இன்றுடன் 6ஆவது நாளை எட்டியுள்ளது. குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்குவதால் பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டையில் பேருந்தை முழுமையாக இயக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தீர்மானங்கள்

சென்னை சேப்பாக்கத்தில் 220 தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், தொழிலாளர்களின் பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இன்று மாலை சென்னையில் உள்ள அனைத்துப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதல்வருடன் ஆலோசனை

இதற்கிடையே, இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடவருகிறார்.

முன்பதிவு ரத்து

இந்த ஆண்டு பொங்கலுக்குச் சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஜனவரி 11 முதல் தமிழக அரசு சார்பில் 11 983 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தால் சிறப்புப் பேருந்துகளை முழு அளவில் இயக்குவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

கோயம்பேட்டில், முன் கூட்டியே தொடங்கப்பட வேண்டிய 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இதுபோன்று பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களிலும் முன்பதிவு மையங்கள் திறக்கப்படவில்லை. இன்று முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமா, இயக்கப்படாதா என்பது தெரியவில்லை.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018