மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

கிளாமராக நடிக்கத் தயார்!

கிளாமராக நடிக்கத் தயார்!

கிளாமர் ரோலில் நடிக்க எப்போதும் தயார் என்று கூறியுள்ளார் நடிகை கேத்ரின் தெரசா

மெட்ராஸ், கடம்பன், கதகளி, கணிதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கேத்ரின் தெரசா. தற்போது கலகலப்பு இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.

திரையுலகில் நுழைந்தபோது “நான் கவர்ச்சி காட்ட மாட்டேன். ஆடை அணிவதில் கட்டுப்பாட்டை மீற மாட்டேன்” எனக் கூறியவர் கேத்ரின் தெரசா. அதன் பிறகு கோபி சந்த்துடன் நடித்த ‘கௌதம் நந்தா’ திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் ஸிஃபி இணையதளப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “கதை நன்றாக இருந்தால் கிளாமராகவும், காதலியாகவும் தொடர்ந்து நடிக்கச் சம்மதிப்பேன்” என்று கூறியுள்ளார்.

“பிரபல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் கேரக்டர் வேடங்களில் நடிக்க ஒப்புக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் அடிக்கடி என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அதற்காக ஹீரோவுடைய அக்காவாகவோ, தங்கையாகவோ நடிக்கக் கேட்டால் அந்தப் படமே வேண்டாம் என்று கூறிவிடுவேன். நான் தொடர்ந்து ஹீரோயினாகவே நடிக்க விரும்புகிறேன். நான் மட்டுமல்ல எல்லா நடிகைகளும் பொதுவாக அதையே விரும்புவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 9 ஜன 2018