மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு!

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு!

உற்பத்திக் குறைவு மற்றும் விநியோகத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்குத் தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரைத் தேங்காய் விலை அதிகரித்துள்ளது.

தேங்காய் எண்ணெய் விலை தமிழ்நாட்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.192 ஆகவும், கேரளாவில் கிலோ ஒன்றுக்கு ரூ.196 ஆகவும் அதிகரித்துள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் கிலோ ரூ.140 ஆகவும், கேரளாவில் கிலோ ரூ.144 ஆகவும் இருந்தது. விலை உயர்வுக்கான காரணம் குறித்து கொச்சின் எண்ணெய் வியாபாரிகள் சங்கத்தின் (சி.ஒ.எம்.ஏ.) இயக்குநர் தலாத் மஹ்மூத் பிசினஸ் லைன் ஊடகத்திடம் கூறுகையில், "கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 40 சதவிகிதம் தேங்காய் உற்பத்தி சரிந்தது. நடப்பு பருவத்திலும் தேங்காய் எண்ணெய் தயாரிக்கப் போதுமான கொப்பரைத் தேங்காய் கிடைக்கவில்லை. கொப்பரைத் தேங்காய்க்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது" என்றார்.

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

செவ்வாய் 9 ஜன 2018