மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

உலகின் மிக மெல்லிய லேப்டாப்!

உலகின் மிக மெல்லிய லேப்டாப்!

லேப்டாப் தயாரிப்பில் வளர்ந்து வரும் நிறுவனமான ஏசர் புதிய மெல்லிய லேப்டாப் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்று வரும் CES எனப்படும் தொழில்நுட்ப பொருட்களை அறிமுகம் செய்யும் விழாவில் ஏசர் நிறுவனம் நான்கு புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஷிப்ட் 7 என்ற மாடல் உலகின் மிக மெல்லிய லேப்டாப் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8.98 மில்லிமீட்டர் மட்டுமே அகலமுள்ள இந்த லேப்டாப் இதுவரை வெளியான மாடல்களில் மிகவும் மெல்லியதாகும். 8GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் கொண்டு இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 13 இஞ்ச் திரையளவுள்ள இந்த மாடலின் விலை ரூ.1,07,500 எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாடலின் விற்பனை குறித்த அதிகாரபூர்வ வெளியீடு மார்ச் மாதம் முதல் இருக்கும் என ஏசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

i7 ப்ராசெஸ்சர் வசதி கொண்டுள்ள இந்த மாடலில் சிம்களை இணைத்து 4G நெட்வொர்க் பயன்படுத்த முடியும் என ஏசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 9 ஜன 2018