மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

விவசாயிகள் குறித்த அக்கறையில்லா அரசு!

விவசாயிகள் குறித்த அக்கறையில்லா அரசு!

ஆளுநர் உரைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஜி.ராமகிருஷ்ணன் விவசாயிகள் குறித்த எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 8) கூடிய நிலையில், ஆளுநர் பன்வாரிலால் முதன்முறையாக சட்டமன்றத்தில் உரையாற்றினார். ஆனால், ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் தமிழக அரசைப் பாராட்டும் விதமாகவே அமைந்துள்ளது. எனவே ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகப் பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்

இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட 2018-19க்கான தமிழக ஆளுநரின் உரை, தமிழக மக்களின் தற்போது அதிகரித்துவரும் ஏராளமான பிரச்னைகளுக்கு எவ்வித தீர்வும் அளிக்காமல் மக்களை ஏமாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளது. மக்கள் சந்தித்துவரும் இன்னல்களுக்கு எவ்வித நிவாரணமோ, மாற்று திட்டங்களோ இந்த ஆளுநர் உரையில் எதுவும் கூறப்படவில்லை என்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்திலும், நாடு முழுவதிலும் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக வணிகர்கள், சிறு குறு தொழில்முனைவோர் எழுப்பிய கண்டனக் குரல்களை இது பிரதிலிப்பதாக இல்லை. மத்திய மாநில அரசுகளின் வரிவருவாய் பகிர்வின் காரணமாக தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் ரூ.6,000 கோடி குறைந்துள்ளது என்பதை ஆளுநர் அறிக்கை தெரிவித்துள்ளபோதிலும், அதுகுறித்து கண்டனமோ அல்லது வருவாய் இழப்பீட்டை சரிகட்ட மத்திய அரசிடம் எத்தகைய அணுகுமுறையைக் கையாள்வது என்பது பற்றிய கருத்தோ இந்த உரையில் இல்லை.

தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆளுநர் உரையில் விவசாயிகள் பிரச்னைக்குப் போதுமான நிவாரணம் அளிக்கும் வகையிலான எவ்வித திட்டமும் இல்லை. அல்லலுறும் விவசாயிகள் குறித்து எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை. காயும் பயிரைக் காப்பாற்ற கர்நாடக மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றுத்தர மாநில அரசு எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது என்பது குறித்து ஆளுநர் அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லாததும் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018