மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

என்னை யாரும் புகழாதீங்க!

என்னை யாரும் புகழாதீங்க!

சட்டப்பேரவையில் தன்னை யாரும் புகழ வேண்டாம் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் இன்று (ஜனவரி 9) துவங்கியது. அவை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் ஓகி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற ஆரம்பித்தது.

கேள்வி நேரத்தின்போது கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் எழுந்து, "ஜல்லிக்கட்டு நாயகன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்" என்று பாராட்டிப் பேசினார். கேள்வி நேரத்தில் தலைவர்களைப் பாராட்டக் கூடாது என்று திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 9 ஜன 2018