மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

தோனியை மிஞ்சிய சாஹா

தோனியை மிஞ்சிய சாஹா

இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்திய அணியின் விக்கெட்கீப்பர் விருத்திமான் சாஹா இந்த ஒரு போட்டியில் மட்டும் 10 கேட்ச்களைப் பிடித்து மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

தோனி ஆஸ்திரேலிய அணியுடன் கடந்த 2014ஆம் ஆண்டு விளையாடிய பொழுது 9 பேரை ஆட்டமிழக்கச் செய்ய உதவினார். அதில் 8 கேட்ச்கள் மற்றும் ஒரு ஸ்டம்பிங் அடங்கும். சாஹா இந்தப் போட்டியில் 10 கேட்ச்களைப் பிடித்து அந்தச் சாதனையை முறியடித்துள்ளார். 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமான சாஹா இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 85 நபர்களை ஆட்டமிழக்கச் செய்ய உதவி உள்ளார். அதில் 75 கேட்ச்கள் 10 ஸ்டம்பிங் அடங்கும்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

செவ்வாய் 9 ஜன 2018