மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

தொடரும் அஜித்-அனிருத் கூட்டணி?

தொடரும் அஜித்-அனிருத் கூட்டணி?

விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்- சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் விஸ்வாசம். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் யுவன் இந்தப் படத்திலிருந்து விலகியது உறுதியானது. இதை அடுத்து விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இதில் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கு கருத்து தெரிவித்த சாம் சி.எஸ், ‘நான் விஸ்வாசத்தில் பணிபுரிகிறேனா என்பது எனக்கே தெரியவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக விஸ்வாசத்திற்கு யார் இசையமைக்க இருக்கிறார் என்கிற கேள்விகள் எழுந்தன. தற்போது அனிருத் இசையமைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அனிருத் இசையில் வெளியான வேதாளம், விவேகம் படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தக் கூட்டணி ஒப்பந்தம் உறுதியானால் அஜித் படத்திற்கு அனிருத் மூன்றாவது முறையாக இசையமைப்பார். விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 58வது படமான விஸ்வாசத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய் 9 ஜன 2018