மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

மதிப்பெண் முறைகேடு: முக்கியக் குற்றவாளியிடம் விசாரணை!

மதிப்பெண் முறைகேடு: முக்கியக் குற்றவாளியிடம் விசாரணை!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மதிப்பெண் முறைகேடு வழக்கில் சான்றிதழ்களில் மதிப்பெண்களைத் திருத்தம் செய்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 பணியிடங்களை நிரப்புவதற்கு செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றுத் தேர்வு முடிவுகள் நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்டன. ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் 2200 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்தத் தேர்வு முடிவில் முதலில் வெளியிட்ட மதிப்பெண்களுக்கும், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் உள்ள மதிப்பெண்களுக்கும் 60 முதல் 80 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் இருந்ததாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், முறைகேடாக வேலையில் சேர முயன்றவர்கள் என 156 பேர் மீது 6 பிரிவுகளில் குற்றப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தேர்வு முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த கால் டாக்சி டிரைவர் கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அவருடைய வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் ரூ.15 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. மேலும் கணேசன் சுப்பிரமணியன் என்ற நபருக்கு கார் ஓட்டியதாகவும், அவர் இந்த மோசடிக்குத் தரகராக செயல்பட்டதாகவும் குற்றப் பிரிவினரிடம் கூறியுள்ளார். சுப்பிரமணியனைப் பிடிக்க முயன்றபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 9 ஜன 2018