மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

பொருளாதார நிபுணர்களுடன் மோடி சந்திப்பு!

பொருளாதார நிபுணர்களுடன் மோடி சந்திப்பு!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னணி பொருளாதார நிபுணர்களையும் துறை நிபுணர்களையும் சந்தித்து ஆலோசிக்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசும் சம்பந்தப்பட்ட துறையினரும் இறங்கியுள்ளனர். அதன் ஒருபடியாக ஜனவரி 10ஆம் தேதி டெல்லியில் நிதி ஆயோக் சார்பாக நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னணி பொருளாதார நிபுணர்களைச் சந்தித்து பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இக்கூட்டத்தில் நிதி ஆயோக் துணைத் தலைவர், நிதி ஆயோக் உறுப்பினர்கள், துறை நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தேசிய வருவாய் அறிவிப்பைத் தொடர்ந்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி முந்தைய நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக 6.5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மோடி ஆட்சிக் காலத்தில் இது குறைந்தபட்ச வளர்ச்சியாகும். எனவே, 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மோடி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், திட்ட ஆலோசனைகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 ஜன 2018