மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக ரஹ்மான்

சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக ரஹ்மான்

சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் தலைநர் காங்டாக்கில் நேற்று (ஜனவரி 8) குளிர்காலத் திருவிழா தொடங்கியது. முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில் தலைமை உரையாற்றிய முதலமைச்சர் பவன்குமார், சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராகப் பணியாற்றுமாறு ரஹ்மானை அன்புடன் அழைப்பு விடுத்தார். அதனை ரஹ்மானும் ஏற்றுக்கொண்டார். தனது வேண்டுகோளை ஏற்று சிக்கிம் மாநில வளர்ச்சிக்குத் தனது மதிப்புமிக்க நேரத்தைச் செலவழிப்பதற்காக ரஹ்மானுக்கு நன்றி தெரிவிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

விழாவில் பேசிய ரஹ்மான், “சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டது எனக்குக் கிடைத்த பாக்கியம். சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாகத் திகழ்கிறது. எனக்கு முக்கியத்துவம் தந்து என்னைக் கௌரவிக்கும் விதமாக அளித்த தூதர் பணியை நான் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன். அதைச் சிறப்புடன் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநில அரசின் விளம்பரத் தூதராக ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநிலத்தின் அமைச்சருக்குரிய அனைத்து அந்தஸ்துகளும் ரஹ்மானுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 9 ஜன 2018