புதுவை அரசு மருத்துவமனையில் தீ விபத்து!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இன்று(ஜனவரி 9) அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் தினம்தோறும் 3000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதில் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மருத்துவமனைக்கு மின் இணைப்பு செய்யும் கண்ட்ரோல் ரூமில் இன்று அதிகாலை திடீரென மின் கசிவினால், தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் மருத்துவமனையினுள் புகை மண்டலமாகக் கிளம்பியதால் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.