மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

தோனி Vs ரஜினி: ரசிகர்களை ஈர்க்க ‘பக்கா’ ப்ளான்!

தோனி Vs ரஜினி: ரசிகர்களை ஈர்க்க ‘பக்கா’ ப்ளான்!

அசோக்குமாரின் ‘நெருப்புடா’ படத்துக்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு பக்கா, துப்பாக்கி முனை ஆகிய இரண்டு படங்களில் நடித்துவருகிறார். தற்போது ‘பக்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா, இயக்குநர் பேரரசுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் . விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். மேலும் சூரி, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் பிரபு கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகராக ‘தோனி குமார்’ என்ற பெயரில் நடித்துள்ளார். அதேபோல், நடிகர் ரஜினிகாந்த்தின் ரசிகையாக ‘ரஜினி ராதா’ எனும் கதாபாத்திரத்தில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

“சின்ன வயசுல நீ இடுப்ப கிள்ளுன உடனே ஓன்னு அழுகுற அந்த ராதான்னு நினைச்சியா” என்று ரஜினி ரசிகையாகவே ட்ரெய்லரில் வலம் வருகிறார் நிக்கி கல்ராணி. பிந்து மாதவி, நிக்கி கல்ராணி இருவருக்கும் சமமாகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கிராமப்புறப் பின்னணியில் சூரி, சதீஷ் காமெடியில் கவனம் ஈர்க்கின்றனர்.

சி.சத்யா இசையமைத்துவரும் இதற்கு எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘பென் கன்ஸ்டோரியம் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பில் டி.சிவகுமார் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. விக்ரம் பிரபுவின் ரசிகர்களோடு ரஜினி, தோனி ரசிகர்களையும் ட்ரெய்லர் ஈர்த்துவருவதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018