மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

மம்தாவின் ஆன்மிக அரசியல்!

மம்தாவின் ஆன்மிக அரசியல்!

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் இந்துக்களின் வாக்குகளைக் குறி வைத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படத் தொடங்கியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வராக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். சிறுபான்மையினர் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்கள் வாக்குகள் மம்தாவுக்கே கிடைத்து வருகிறது. கிறிஸ்துவர்களை கவரும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கொல்கத்தாவின் ஆலன் பூங்காவில் கிறிஸ்துமஸ் விழாவை அவர் தொடங்கிவைத்தார்

இந்நிலையில், சமீப காலமாக மேற்கு வங்கத்தில் பாஜக வலுப்பெற்று வருகிறது. அதன் வாக்கு வங்கியும் அதிகரித்து வருகிறது. பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் பாஜக பக்கம் திரும்பியுள்ளதே இதற்குக் காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கருதுகிறது . எனவே, இந்துக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது.

இதன் ஒருபகுதியாக, பிர்பும் மாவட்டத்தில் உள்ள போல்பூர் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுபாதா மோண்டல் புரோகிதர் மாநாடு நடத்தியுள்ளார். பாஜகவினரால் இந்துயிசம் எவ்வாறு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவே இந்த மாநாடு நடத்தப்பட்டதாக அனுபாதா கூறியுள்ளார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான புரோகிதர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பகவத் கீதையும் சாரதா மற்றும் ராமகிருஷ்ணரின் புகைப்படங்களும் வழங்கப்பட்டன. ஜனவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள மகர சங்கராந்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மம்தா சமீபத்தில் நேரில் சென்று பார்வையிட்டார். . இதற்குமுன் இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு எந்த முதல்வரும் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 9 ஜன 2018