மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

கொச்சியில் மையமிடும் விக்ரம், சூர்யா

கொச்சியில் மையமிடும் விக்ரம், சூர்யா

திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகித் திரையரங்குகளுக்குச் செல்லும் முன் படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் படம் பற்றி விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகள் தற்போது அதிகமாக நடைபெறுகின்றன. தமிழ்ப் படங்களுக்குக் கேரளாவிலும் நல்ல சந்தை உருவாகியிருப்பதால் அங்கும் நடிகர், நடிகைகள் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தொடர்ந்துவருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச், பிரபு தேவாவின் குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் வெளியாக உள்ளன. ஜனவரி வெளியீடு என்றே ஸ்கெட்ச் படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவிலுள்ள கொச்சியில் இன்று (ஜனவரி 9) மாலை வெவ்வேறு இடங்களில் தங்களது படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் விக்ரம், சூர்யா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ‘ஓப்ரான்’ மாலில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் விக்ரம், தமன்னா உள்ளிட்ட ஸ்கெட்ச் படக் குழுவினர் கலந்துகொள்கின்றனர். தானா சேர்ந்த கூட்டம் படம் வெளிவருவதை முன்னிட்டு, தூய இருதயக் கல்லூரியில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் சூர்யா கந்துகொள்கிறார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 9 ஜன 2018