மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

இன்றைய கூகுள் டூடுல் ஹீரோ யார் தெரியுமா?

இன்றைய கூகுள் டூடுல் ஹீரோ யார் தெரியுமா?

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராய்ப்பூரில் 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பிறந்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறிய உயிர்வேதியியலாளர் ஹர் கோவிந்த் குரானா தான் இன்றைய கூகுள் டூடுல் ஹீரோ!

குரானாவின் தொடக்கக் கல்வி, கிராமப் பள்ளியில் மரத்தடியின் கீழ்தான் துவங்கியது. இளவயது முதலே அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். சுமார் 100 குடும்பங்கள் கொண்ட அவரது கிராமத்தில் குரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்று விளங்கியது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பைப் பயின்றார். பின்னர் பி.எஸ்சி பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். அதைத்தொடர்ந்து 1945ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.

1960ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் செயற்கை உயிர் உற்பத்தித் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்பொழுது அமெரிக்காவில் இவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. அங்கு மார்சல் நோரென்பர்க்-உடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் மரபுவழிப்பட்ட நோய்கள் சிலவற்றைக் குணமாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்காக 1968ஆம் ஆண்டு உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, குரானா, நோரென்பர்க், ஹாலி ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 9 ஜன 2018