மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

தொழில்நுட்பக் கருவிகள் இல்லை: முதல்வர் ஒப்புதல்!

தொழில்நுட்பக் கருவிகள் இல்லை: முதல்வர் ஒப்புதல்!

தொலைத்தொடர்பு கருவிகள் இல்லாத காரணத்தால் ஆழ்கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு ஓகி புயல் குறித்த தகவலை எங்களால் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று ( ஜனவரி 9) ஓகி புயலில் இறந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் எழுந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதையடுத்துப் பேசிய சபாநாயகர் தனபால், "ஓkகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடராக அறிவிக்க, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். புயல் பாதிப்பின்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். முதல்வரும் குமரிக்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டார்" என்று கூறினார்.

கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுந்து, ஓகி புயல் பாதிப்புகள் குறித்து மீனவர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறி அதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "புயல் உருவாவதற்கு முன்பே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. வானிலை மைய அறிவுறுத்தலின்படி நவம்பர் 29ஆம் தேதியே அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. 100 கடல் மைல் தூரத்துக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பினார்கள். அதற்கும் மேல் சென்றவர்களுக்கு ஓகி புயல் முன்னெச்சரிக்கை தகவல் சென்று சேரவில்லை. தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியவில்லை" என்று விளக்கம் அளித்தவர், புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

"ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். திசை மாறி பிற மாநிலங்களுக்கு சென்ற மீனவர்களுக்கு டீசல், உணவுப் படி வழங்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். ஒகி புயலால் மாயமான 35022 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்" என்றும் கூறினார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 9 ஜன 2018