மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

பத்மாவதி: தொடரும் சிக்கல்கள்!

பத்மாவதி: தொடரும் சிக்கல்கள்!

தணிக்கைத் துறையின் வழிகாட்டுதலின்படி மாற்றங்கள் செய்து பெயரை மாற்றி ஒருவழியாக ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ள பத்மாவதி திரைப்படம் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்துதான் வருகிறது.

பத்மாவதி படம் உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளும் பிரச்சினைகளும் சேர்ந்தே கிளம்பிவந்தன. படப்பிடிப்பு தளத்தில் தாக்குதல், படத்திற்குத் தடை, சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி, சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோன் ஆகியோருக்குக் கொலை மிரட்டல் ஆகியவை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் பிரச்சினையின்றி வெளியாகுமா என்ற கேள்வியை எழுப்பின.

இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 26 கட், படத்தின் பெயர் மாற்றம், 3 முறை விளக்க நோட்டீஸ் போன்றவற்றுக்கு ஒப்புக்கொண்டால் சான்று வழங்குவதாக அறிவித்தது. படக்குழுவினரும் இதனை ஏற்று கொள்ளவே தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கியது. இதனால் படத்தின் தலைப்பை ‘பத்மாவத்’ என மாற்றியுள்ளனர்.

இதனையடுத்து, ஜனவரி 25ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் இந்த அறிவிப்பு வெளிவந்த பின்னரும் கர்ணி சேனா அமைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மேலும் ராஜஸ்தானில் படத்தை வெளியிட தடைவிதிப்பதாக அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜீ நேற்று (ஜனவரி 8) தெரிவித்துள்ளார். “ராணி பத்மினியின் தியாகம் எங்கள் மாநிலத்தின் கௌரவமும் பெருமையும் ஆகும். இது வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமல்ல எங்கள் கௌரவம். எங்கள் பெருமைக்கு அவதூறு விளைவிக்க அனுமதிக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ணி சேனா அமைப்பின் தேசிய தலைவர் சுக்தேவ் சிங் கோகமெதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, “இந்தியத் தணிக்கை வாரியம், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் ஜனவரி 25 அன்று படத்தை வெளியீடு செய்ய முன்வந்தால் இந்தியா எரிந்துவிடும் என்று நான் உரத்த குரலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்கள் தாய் ராணி பத்மாவதியைக் குறைகூறும் இந்த முயற்சியை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 9 ஜன 2018