மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வுப் பேரணி!

தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வுப் பேரணி!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பசுமை உறுதிமொழி ஏற்பு மற்றும் தூய்மைப் பணி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக வாயிலில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணியை ஆட்சியர் கேசவன் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை இயக்குனர் ரமேஷ் ஆகியோர் துவக்கிவைத்தனர்.

மேலும் பள்ளி மாணவர்களுடன் நகராட்சி ஒப்பந்த ஊழியர்களும் பேரணியில் கலந்துகொண்டு தூய்மையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018