மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

உலகமே நமது குடும்பம்: மோடி

உலகமே நமது குடும்பம்: மோடி

வெளிநாட்டில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் இந்திய வம்சாவளியினரின் மாநாட்டில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். உலகின் பல நாடாளுமன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 123 எம்.பி.க்கள், உலகின் பல மாநகரங்களில் இருக்கும் 17 மேயர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை இன்றைய தினத்தை (ஜனவரி 9) வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தினமாகக் கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக முதன் முறையாக இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது.

வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகளிடம் பேசிய பிரதமர் மோடி,

‘’இந்தியா அடுத்த நாடுகளின் வளத்தை அபகரிக்கவோ, அடுத்த நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றவோ என்றைக்கும் முயன்றதில்லை. வளர்ச்சியைக் கட்டமைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதில்தான் நாம் முனைப்பாக இருக்கிறோம். இதுதான் உங்கள் மூலமாக நாம் அனைத்து நாடுகளுக்கும் சொல்லும் செய்தி'' என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வாழ்த்திய அவர்,

“நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் நலனுக்காக மட்டுமல்ல, வெளிநாடுகளில் வசிக்கும் உங்களைப் போன்ற இந்திய வம்சாவளியினரின் நலன்களைக் காக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் உலகத்துடனான உறவுகளை ஒவ்வொரு நாளும் வலுப்படுத்திவருகிறோம்’’ என்றார்.

மேலும் பேசிய மோடி, ‘’ஐ.நா.வின் உலக அமைதிக்கான பணியில் இந்தியாதான் பெரும் பங்குதாரராக இருக்கிறது. நேபாளத்தில் பூகம்பம் வந்தபோதும் சரி, இலங்கையில் வெள்ளம் வந்தபோதும் சரி, மாலத்தீவில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டபோதும் சரி இந்தியாதான் முதலில் உதவிக் கரம் நீட்டியது. ஏமன் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டபோது இந்தியா 4,500 பேரை நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றியது. அவர்களில் 2,500 பேர் இந்தியர்கள் அல்லர்.’வசுதேவ குடும்பகம்’ என்பதே இந்திய தத்துவம். அதற்கேற்றவாறு உலக நாடுகள் அனைத்தையும் நமது குடும்பமாக பாவித்துவருகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018