மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

கௌரி லங்கேஷ் வேடத்தில் நித்யா மேனன்?

கௌரி லங்கேஷ் வேடத்தில் நித்யா மேனன்?

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பான படத்தில் நித்யா மேனன் நடிப்பதாக வந்த செய்திகள் தொடர்பாக அவர் விளக்கம் தந்துள்ளார்.

கடந்த ஆண்டு பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது. நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இந்தச் சம்பவம் குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ‘பிராணா’ என்ற படத்தில் கவுரி லங்கேஷ் வேடத்தில் நித்யாமேனன் நடிப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து நித்யாமேனனிடம், “இது கவுரி லங்கேஷ் கொலை வழக்கை மையமாகக் கொண்ட கதையா, கௌரி லங்கேஷ் வேடத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “பிராணா படம் 4 மொழிகளில் உருவாகிறது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக 4 முறை நடிக்க வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. படம் நன்றாக வரவேண்டும் என்ற நிலையில் சிரமம் பாராமல் நடித்து வருகின்றனர். இதுபோல் வேறு யாரும் நடித்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கௌரி லங்கேஷ் பாணியிலான கதை என்றாலும் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு 4 மாதத்துக்கு முன்பே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. அந்தச் சம்பவத்துக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பு இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018