மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

இணையக் குற்றங்களுக்கு முக்கியத்துவம்!

இணையக் குற்றங்களுக்கு முக்கியத்துவம்!

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களின் டிஜிபி உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இணைய மற்றும் சமூக வலைதளக் குற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தின் குவாலியரில் உள்ள தெகன்பூரில் அனைத்து மாநிலக் காவல் துறைத் தலைவர்களின் வருடாந்திர மாநாடு ஜனவரி 6ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று மோடி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும், நக்ஸல் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் சில முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் விவாதித்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று ஜனவரி 8 மாநாட்டின் கடைசி நாளில் உரையாற்றிய அவர், இணையக் குற்றங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், அதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

“பாதுகாப்பு என்பதைத் தனித்து அடைய முடியாது” என்று குறிப்பிட்ட அவர், “மாநிலங்களுக்கு இடையே உள்ள தடைகளைத் தகர்த்து தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்” எனப் பேசியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 9 ஜன 2018