மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ஹெல்த் ஹேமா: மகத்தான மரவள்ளி!

ஹெல்த் ஹேமா:  மகத்தான மரவள்ளி!

கிச்சன் கீர்த்தனா இன்று மரவள்ளிக்கிழங்கு அடை மெனு சொல்லியிருக்கிறார். நேற்று வீட்டில் அதைத்தான் செய்திருந்தேன். அந்த நேரம் பார்த்து சில தோழிகள் வர, அடையை விரும்பி சுவைத்தனர். அதில் பாஸ்பரஸ், வைட்டமின், மாவுச்சத்துகள் என ஏகப்பட்ட சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை தெரிந்துகொள்வோமா...

பி17 வைட்டமினின் மருத்துவப் பெயர் ‘அமிக்டலீன் (Amygdaline)’ ஆகும். புற்றுநோய் உயிரணுக்கள் முதிர்ச்சியடையாத அணுக்களாகும் மற்றும் சாதாரண உயிரணுக்களில் உள்ள ‘என்ஸைம்களுக்கு’ மாறாக புற்றணுக்களில் உள்ள என்ஸைம்கள் வேறுபட்ட என்ஸைம்களாகும்.

பி17 வைட்டமின் சாதாரண என்ஸைம்களுடன் இணையும்போது அது மூன்று விதமான சர்க்கரைகளாகப் பிரிகிறது. ஆனால், அது புற்றணுக்களுடன் இணையும்போது அது 1 சர்க்கரை, 1 பென்ஸால்டிஹைட் மற்றும் 1 ஹைட்ரோஸையனிக் அமிலமாக பிரிகிறது. என்ன நடைபெறுகின்றதென்றால் ஹைட்ரோஸையனிக் அமிலமானது உள்ளுக்குள்ளாகவே புற்றணுக்களைக் கொன்றுவிடுகிறது. ஆக, புற்றுநோய் உருவாவதைத் தடுக்கும் முக்கியபங்கை பி17 வைட்டமின் உள்ள மரவள்ளிக்கிழங்கு வகிக்கிறது.

மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

மரவள்ளி அப்போதுதான் அறுவடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கிழங்கை வேகவைக்கும்போது பாத்திரம் மூடப்படாமல் இருக்க வேண்டும். இது கிழங்கில் உள்ள சில வஸ்துகள் ஆவியாக வெளிப்பட உதவும்.

கிழங்கை அதிக நீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் அதிகப்பட்ட நீரை வடித்துவிட வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு குறைந்தது எட்டு மணிநேரத்துக்குச் சுக்கு அல்லது இஞ்சி சேர்ந்த எந்தப் பொருளையும் உட்கொள்ள கூடாது.

எலும்பின் அடர்த்தி குறைபாடு உள்ள பெண்கள் மரவள்ளிக்கிழங்கை வாரத்தில் ஒருமுறையாவது உட்கொள்வதால் இக்குறைப்பாட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018