மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ரஜினி மன்றம்: ஒரு கோடி உறுப்பினர்களுக்கு இலக்கு!

ரஜினி மன்றம்: ஒரு கோடி உறுப்பினர்களுக்கு இலக்கு!

தான் அரசியலுக்கு வருவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்த நிலையில், கடந்த 1ஆம் தேதி ரஜினி மன்றம் என்ற பெயரில் இணையப் பக்கமும், செயலியும் தொடங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை ஆரம்பித்தது. மேலும், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் என்ற பெயர், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பொதுவாகவே அரசியல் கட்சியினர் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை குறைந்த கட்டணத்தில் வழங்குவர். ஆனால், ரஜினி மக்கள் மன்றம் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மக்களை உறுப்பினராகச் சேர்க்க முடிவு செய்தனர். இதனால் மாவட்டந்தோறும் உறுப்பினர் படிவங்களை அனுப்புவதற்குப் பதிலாக வாட்ஸ்அப், இ.மெயில் மூலமாக மாடல் அனுப்பி, அந்தந்த மாவட்டத்துக்குத் தேவையானவற்றை பிரின்ட் எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டனர். ஆனால், உறுப்பினர் படிவத்துக்கான கட்டணத்தைப் பற்றி குறிப்பிடவில்லை.

இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினரும் அங்குள்ள தொழில் அதிபர்கள் மூலமாக லட்சக்கணக்கான படிவங்களை அச்சடித்துக் கொடுக்கச்சொல்லி விநியோகம் செய்கிறார்கள். கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தில் பாபா முத்திரை தலைப்பிலும் மையத்திலும் இடம்பெற்றுள்ளது.

படிவத்தில் பெயர், ஊர், வயது, தந்தை அல்லது கணவர் பெயர், விலாசம், கைபேசி எண், மின்னஞ்சல், வாக்காளர் அடையாள அட்டை எண், தற்போதிருக்கும் கட்சி போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருந்தாலும் சாதி, மதம் பற்றி கேட்கவில்லை.

உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள கடலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி மூர்த்தியிடம் இதுகுறித்து கேட்டபோது, “ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராவதற்காக மக்கள் எழுச்சியுடன் வருகின்றனர். அதிகமாக அதிமுகவிலிருந்தும் திமுகவிலிருந்தும் வந்து சேர்கிறார்கள். எங்களுடைய கடலூர் மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் ஒரு கோடி பேர் சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உறுப்பினர்கள் சேர்க்கை முடிந்து படிவங்கள் தலைமைக்குச் சென்றதும் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதே கொடிதான் அவர் நடிக்கும் திரைப்படத்திலும் இடம்பெறுகிறது” என்றார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 9 ஜன 2018