மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

விஜய் ஆன்டனி படங்களுக்குத் தடை!

விஜய் ஆன்டனி படங்களுக்குத் தடை!

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆன்டனி. வெளித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க எட்டுக் கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கிறார். இவரது சம்பளமாக எட்டுக் கோடியும், தயாரிப்புச் செலவுக்கு ஆறு கோடியையும் கொடுத்தால் முதல் பிரதி அடிப்படையில் படம் எடுத்துக் கொடுப்பார் விஜய் ஆன்டனி. படத் தயாரிப்பில் பிற நிறுவனங்களின் தலையீட்டை இவர் அனுமதிப்பதில்லை.

இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘அண்ணாதுரை’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 6.50 கோடிக்கும், கேரள உரிமையை 32 லட்சத்துக்கும் அலெக்சாண்டர் என்பவர் வாங்கினார். விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான ‘கருப்பன்’ படத்தை ஏற்கெனவே வாங்கி இவர் ரிலீஸ் செய்திருந்தார். அண்ணாதுரை படம் வெளியான முதல் நாளே வசூலில் மூச்சுத் திணறியது. தமிழ்நாட்டில் படம் ஓடி முடிந்தபோது 2.50 கோடி ரூபாய் மட்டும் வசூல் செய்தது. அண்ணாதுரை நான்கு கோடி ரூபாய் நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் 10 லட்சம் வசூல் செய்து 22 லட்சம் நஷ்டத்தை உண்டாக்கியிருக்கிறது.

அண்ணாதுரை படம் பார்த்துவிட்டு விலை பேசலாம் எனக் கூறியபோது ‘என்னை நம்புங்கள். எதுவென்றாலும் நான் பொறுப்பு’ என்று விஜய் ஆன்டனி கூறியதை நம்பி, படத்தை வாங்கினார் அலெக்சாண்டர். அண்ணாதுரை ரிலீஸுக்குப் பின் வசூல் கணக்குகளுடன் விஜய் ஆன்டனியைச் சந்தித்த அலெக்சாண்டரிடம் “நஷ்டத் தொகையைத் திரும்ப கொடுக்க முடியாது. நஷ்டத்தைச் சரிக்கட்ட முதல் பிரதி அடிப்படையில் படம் நடித்துத் தருகிறேன். எனது சம்பளம் எட்டு கோடி ரூபாய்” என ஆன்டனி கூறியுள்ளார்.

நீங்கள் கூறுவது போல் 14 கோடி செலவு செய்து படம் எடுத்தால் வியாபாரம் ஆகாது. நீங்க நடிச்ச படத்தில் பிச்சைக்காரன் மட்டும்தான் அதிகமாக (7 கோடி ரூபாய்) வசூல் செய்த படம். இதுதான் உங்களோட ஒரிஜினல் மார்க்கெட். இதைக் கவனத்தில்கொள்ளாமல் எட்டு கோடி சம்பளம்; 14 கோடியில் முதல் பிரதி; ரிலீஸ் செலவு 5 கோடி; ஆக மொத்தம் 19 கோடியை நீங்கள் நடிக்கும் படம் வசூல் செய்யும் சாத்தியம் இல்லை” என்று அலெக்சாண்டர் கூறியும் விஜய் ஆன்டனி ஏற்பதாக இல்லை.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 ஜன 2018