மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிய அதானி

அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிய அதானி

2017ஆம் ஆண்டில் இந்தியக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பெருமளவு உயர்ந்த நிலையில், அதிகபட்சமாக கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 125 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் அதிக சொத்துமிக்க பணக்காரர்களுக்கான புளூம்பெர்க் பட்டியலில், 2017ஆம் ஆண்டில் அதானி குழுமத் தலைவரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 124.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரியவருகிறது. அதாவது 2017 ஜனவரியில் 4.63 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு, டிசம்பர் மாத முடிவில் 10.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அவரைத் தொடர்ந்து டி-மார்ட் நிறுவனத் தலைவரான ராதாகிருஷ்ணன் தமனியின் சொத்து மதிப்பு 80 சதவிகித உயர்வுடன் 3.88 பில்லியன் டாலரிலிருந்து 6.96 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 77.53 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஜனவரியில் 22.70 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு டிசம்பரில் 40.30 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 9 ஜன 2018