மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ஒரே காரில் ஸ்டாலின் - வைகோ

ஒரே காரில் ஸ்டாலின் - வைகோ

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.

திமுகவைக் கடுமையாக எதிர்த்துவந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது திமுக ஆதரவு நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார். முரசொலி பவள விழாவில் கலந்துகொண்ட வைகோ, திமுக தலைவர் கருணாநிதியின் அந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துப் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற மதிமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், மதிமுக தொடர்ந்து செயல்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியைப் பல்வேறு தலைவர்களும் சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அந்தவகையில் நேற்று இரவு சென்னை கோபாலபுரத்துக்குச் சென்ற வைகோ, கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார். சந்திப்பில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்தேன். அவரிடம் எந்த அரசியலும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “திமுக செயல்தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று (ஜனவரி 8) இரவு 7 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். ஸ்டாலினோடு உரையாடிவிட்டு, அவரது காரிலேயே அவருடன் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார்.

இரவு 8 மணி அளவில் டாக்டர் கலைஞர் அவர்களை வைகோ பார்த்தபோது, ‘யார் என்று தெரிகிறதா?’ என்று தளபதி ஸ்டாலின் அவர்கள் கலைஞரிடம் கேட்டவுடன், புன்னகை பூத்தவாறு வைகோ என உணர்த்தினார்.

சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் நிருபர்களிடம், ‘அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிய அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைப் பார்த்தேன். நலமாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பக்கபலமாக, உறுதுணையாக செயல்படுவது என்று எங்கள் இயக்கம் ஒருமனதாக முடிவு செய்தது என்று நான் கூறினேன்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 9 ஜன 2018