மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ஒப்ரா வின்ஃப்ரே ‘கோல்டன்’ உரை! (பகுதி 1)

ஒப்ரா வின்ஃப்ரே ‘கோல்டன்’ உரை! (பகுதி 1)

கோல்டன் குளோப் விருதுகள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருப்பதுடன், தன்னை வரலாற்றின் பக்கங்களுடன் இணைத்துக்கொண்டது. ஒப்ரா வின்ஃப்ரேவுக்கு செசில் பி.டிமிலே விருது வழங்கி, இவ்விருதைப் பெரும் முதல் கருப்பினப் பெண்ணாக அவரை முன்நிறுத்தி தனக்குப் பெருமை சேர்த்துக்கொண்டது. இப்படியொரு வரலாறு உருவாகக் காரணம் கருப்பினத்தவர்களை அரசியல், பண, செல்வாக்கு பலத்தால் வெறுத்து ஒதுக்கியது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஹாலிவுட்டில் இதோ ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. கருப்பினத்தவர், வெள்ளையர்கள் எனப் பிரித்துப்பார்த்த காலம் மறைந்து, தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டவே கருப்பு நிற உடையில் கோல்டன் குலோப் விருதுக்கு வருகை தந்திருந்தனர் பெண்கள்.

OSCARWHITE என்ற ஹேஷ்டேக் மூலம் செய்த சமூக வலைதளப் புரட்சியின் மூலம் ஹாலிவுட்டையே புரட்டிப்போட்டனர் உலகமக்கள். அதன் வலிமையை ஹாலிவுட் உணர்ந்தது, அதன் செல்வாக்கு மிகுந்த முதலைகளை பாலியல் தொல்லைகளின் காரணமாக நடிகைகள் தோலுரித்தபோது தான். இதற்காகவே உருவாக்கப்பட்டது Times Up என்ற முன்னெடுப்பு. இனியும் அமைதியாக இருக்கத் தேவையில்லை என்று முன்னெழுந்த ஹாலிவுட் நடிகைகளின் எழுச்சியின் அடையாளமாக, கோல்டன் குளோப் விருதுக்கு ‘கருப்பு’ உடையில் வருமாறு அனைவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அதன்படியே கருப்பு உடையில், சிகப்பு வரவேற்புக் கம்பளத்தில் நடந்துவந்த அந்த பெண்கள் அத்தனை எளிதாகத் தங்களது எதிர்ப்பையும், புரட்சியொன்று உருவாகிவிட்ட அடையாளத்தையும் பதிவு செய்துவிட்டது. இதற்கு உச்சி முகந்ததுபோல கோல்டன் குளோபின் செசில் பி.டிமிலே விருதினைப் பெற்ற ஒப்ரா வின்ஃப்ரேவின் பேச்சு அமைந்தது. என்ன பேசினார் தெரியுமா?

1964ஆம் ஆண்டு மில்வாகியிலுள்ள என் அம்மாவின் வீட்டு லினோலியத் தரையில் அமர்ந்து, 36ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் ஆனே பேங்கிராஃப்ட் கொடுத்த, சிறந்த நடிகருக்கான விருது வழங்கும் தருணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கையிலிருந்த உரையைப் பிரித்து அவர் சொன்ன ஐந்து வார்த்தை வரலாறு படைத்தது. இந்த விருதைப் பெறுபவர் சிட்னி பொய்டியர்

நான் இதுவரையில் பார்த்ததிலேயே நேர்த்தியான ஒரு மனிதர் மேடை மீதேறி வந்தார். அவரது டை வெற்றை நிறத்திலிருந்தது எனக்கு நினைவிலிருக்கிறது. ஆம், அவரது தோல் நிறம் கருப்பு தான். ஒரு கருப்பு மனிதர் அப்படிக் கொண்டாடப்பட்டதை நான் பார்த்ததே இல்லை.

மற்றவர்களின் வீட்டை சுத்தம் செய்துவிட்டு சோர்வுடன் வீட்டுக்கு வந்திருந்த அம்மா வீட்டின் மோசமான தரையில் அமர்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறியவளின் அந்த மனநிலை எப்படிப்பட்டது என்று மற்றவர்களுக்கு விளக்க நான் பலமுறை முயற்சித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் சிட்னியின் லில்லீஸ் இன் த ஃபீல்டு படத்தில் வரும் ஆமென், ஆமென். ஆமென், ஆமென். என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

1982இல் சிட்னி, செசில் பி.டிமிலே விருதை இதே இடத்தில் கோல்டன் குளோபிடம் பெற்றார். இப்போது நான். இது என்னுடன் முடிந்துவிடுவதில்லை. முதல் கருப்பினப் பெண்ணாக நான் பெறும் இந்த விருதினை, எங்காவது ஒரு சிறுமி என்னைப்போலவே பார்த்துக்கொண்டிருப்பாள். அவளைப்போன்ற அத்தனைப் பேருடனும் உங்களுடனும் இந்த மகிழ்வான மாலைப் பொழுதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.

A.M. Chicago நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பளித்த டென்னிஸ் ஸ்வான்சன், அந்த நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் “Yes, she is Sofia in 'The Color Purple”க்கு கொண்டுசென்ற குவின்சி ஜோன்ஸ், நட்புக்கு விளக்கமாக இருக்கும் கெயில் ஆகியோர் இங்கு குறிப்பிடவேண்டிய சில பெயர்கள்.

இந்த விருதுவிழாவை நடத்தும் ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனுக்கும் நான் நன்றி சொல்லவேண்டும். ஏனென்றால், நம் அனைவருக்குமே பிரஸ் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று நன்றாகத் தெரியும். ஆனால், ஆத்மார்த்தமான உழைப்பும், உண்மையைப் பேசவேண்டும் என்ற எண்ணமும் தான் பொய், புரட்டு ஆகியவற்றை நம் கண்களிலிருந்து மறைத்து அநீதிகளையும், ஊழல்களையும் வெளிக்கொணரச் செய்கின்றன. முன்னெப்போதும் இல்லாததைவிட பல இக்கட்டான சூழல்களைக் கடந்து வந்துகொண்டிருக்கும் இந்தநிலையில் நான் பத்திரிகைகளை மிகவும் மதிக்கிறேன். அது உண்மையப் பேசுவது மட்டும் தான் நமது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்கமுடியும். அந்த வகையில் மிகவும் தைரியமாக முன்னே வந்து தங்களது தனிப்பட்ட கதைகளைப் பகிர்ந்துகொண்ட பெண்களை நினைத்து பெருமைப்படுவதுடன் கவரப்பட்டுள்ளேன்.

இந்த அறையிலிருக்கும் ஒவ்வொருவரும் கொண்டாடப்பட்ட காரணம் நாம் வெளியே சொன்ன கதைகள். இந்த வருடம் நாம் கதையாகவே மாறிவிட்டோம். அவை பொழுதுபோக்குத் துறையை மாற்றும் கதை அல்ல. கலாச்சாரம், நிலவியல், இனம், மதம், அரசியல், பணி என எல்லா தளங்களையும் மாற்றியமைக்கும் கதைகள். எனவே, பல வருடங்கள் என் தாயைப் போல குழந்தைகளின் உணவுக்காகவும், பில் கட்டத் தேவையான பணத்துக்காகவும், கனவுகளை நிறைவேற்றவும் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொண்ட என் பெண்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018