மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ராணுவ வீரர்களுக்கான செயலி அறிமுகம்!

ராணுவ வீரர்களுக்கான செயலி அறிமுகம்!

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு, ‘முன்னாள் ராணுவ வீரர் உதவித்தொகை திட்டத்தின்’ (ECHS) கீழ் இந்தியாவின் தென் மாவட்டங்களில் அதிக மருத்துவமனைகள் தொடங்கவிருப்பதாக தென்னிந்திய ராணுவ கமாண்டிங் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான குறை தீர்ப்பு முகாம் திருச்சியில் ஜனவரி 7 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுபேசிய தென்னிந்திய கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த், “இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தென்னிந்தியாவில் முன்னாள் ராணுவ வீரர்களுக்காகப் புதிதாக ஒன்பது மருத்துவமனைகள் கொண்டுவர உள்ளது. மேலும், இவர்கள் எளிதில் பயனடையும் வகையில் 50 கிலோமீட்டர் சுற்றளவில் இவை அமைக்கப்படவுள்ளது. தற்போது தென்னிந்தியாவில் 88 மருத்துவமனைகள் உள்ளன. இவற்றின் தரம் உயர்த்தப்பட்டு, மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வரும் ஜனவரி 15ஆம் தேதி ராணுவ தினத்தன்று ராணுவ வீரர்களுக்கான செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் முன்னாள் வீரர்களுக்கான மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், அங்கு சிகிச்சை பெற முன் அனுமதி பெறுவது, ராணுவ கேன்டீன்களில் உள்ள பொருள்களின் இருப்புக் குறித்து அறியலாம்” என்று தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 9 ஜன 2018