மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

அதிமுகவை மீட்டெடுப்போம்!

அதிமுகவை மீட்டெடுப்போம்!

‘டி.டி.வி.தினகரன் தலைமையில் அதிமுகவை மீட்டெடுப்போம்’ என்று தினகரன் அணியினர் நேற்று (ஜனவரி 8) தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து டி.டி.வி.தினகரன் முதன்முறையாக நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். சட்டப்பேரவை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆளுநர் உரையைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அறிவிப்புகள் அனைத்தும் ஏட்டளவில்தான் உள்ளன. எடப்பாடி அரசுக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஆதரிப்பேன் என்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக முதல்வரைச் சந்திக்க தயங்க மாட்டேன். தேவைப்பட்டால் துறை சார்ந்த அமைச்சர்களையும் சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.

நேற்றைக்கு முன்தினம் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தத் சசிகலாவின் சகோதரர் திவாகரன், தினகரன் தனிகட்சி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று டி.டி.வி.தினகரன் தலைமையில் மயிலாப்பூரில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில்... தீர்மானம் 1: டி.டி.வி.தினகரனை வெற்றிபெறச் செய்த ஆர்.கே.நகர் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பது.

தீர்மானம் 2: டி.டி.வி.தினகரன்தான் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் என விரைவில் நிரூபிப்பது.

தீர்மானம் 3: அதிமுகவை மத்திய அரசிடம் அடகுவைத்த எடப்பாடி மற்றும் பன்னீருக்குக் கண்டனம்.

தீர்மானம் 4: முத்தலாக் விவகாரத்தில் சிறுபான்மையினரின் கருத்தை கேட்க வேண்டும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 9 ஜன 2018