மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

இந்திய அணியின் பரிதாபத் தோல்வி!

இந்திய அணியின் பரிதாபத் தோல்வி!

தென்னாப்பிரிக்க, இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றுவந்த முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. கேப்டவுனில் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் தொடர்ச்சியாக களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 209 ரன்களை மட்டுமே சேர்த்தது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. நான்காம் நாளான நேற்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். 130 ரன்களுக்குத் தென்னாப்பிரிக்க அணி சுருண்டது.

208 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கடந்த ஆண்டில் இந்திய அணி தான் விளையாடிய பெரும்பாலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளதால் இந்தப் போட்டியில் எளிதில் வெற்றி பெற்றுவிடுவோம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், இந்திய அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் மட்டுமின்றி சித்தேஷ்வர் புஜாரா (4), முரளி விஜய் (13), ஷிகர் தவன் (16) ரோஹித் ஷர்மா (10) அனைவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தால் இந்திய அணி தடுமாறியது. பின்னர் சிறிது நேரம் அதிரடியாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களைச் சேர்த்தார். ஆனால், இந்திய அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வெர்னன் ஃபிலாண்டர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 9 ஜன 2018