மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

புது குழப்பம் வந்தவுடன் பழைய குழப்பத்தை மறந்துடுவோம். அதுக்கு உதாரணம்தான் இது.

ஒபாமா தனது 55ஆவது வயதில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறார். ஆனால், ட்ரம்ப் தனது 70ஆவது வயதில்தான் அதிபராகிறார். பில்கேட்ஸ் தனது 30ஆவது வயதிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார். ஆனால், INDITEX SPAIN நிறுவனத்தைத் தனது 50ஆவது வயதில் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமுக்கு 34ஆவது வயதில்தான் ‘சேது’ படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது.

24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30ஆவது வயதில் இறந்தார். தனது 40 வயதில் திருமணம் செய்தவர் தற்போது 62 வயதில் உடல்நலத்துடன் உள்ளார், தனது மகளுக்குத் தெம்பாக வரன் பார்த்து வருகிறார்.

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்குண்டான வயதில் கிடைப்பது அரிது.

எனவே, உங்களுக்கு ஒன்று கிடைத்துவிட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.

உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

யார் கண்டது, அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று? இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானதுதான். எனவே, எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம்.

இங்கே, இப்போது, இந்த நொடியில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்களோ... அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.

தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால், ஆசைகளை ஓட்டைக்குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.

நோ பெய்ன்...

நோ கெய்ன்...

இப்போ, இந்த மெசேஜை ஏற்கெனவே படிச்சிட்டோமான்னு குழப்பத்துல இருக்கப்போ இன்னொரு குழப்பமான மெசேஜ் வந்தது பாருங்க...

நான் குழம்பவும் இல்ல குழப்பவும் இல்ல!

முடிஞ்சா நீங்க தெளிவா இருங்க...

கல்யாணிக்குக்

கல்யாணம் பண்ண

கல்யாணி அப்பா

கல்யாணசுந்தரம்

கல்யாணிக்குக்

கல்யாணம் பண்ற மாப்பிள்ளையைக்

கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணார்.

கல்யாணிக்குக்

கல்யாணம் பிடிக்காம

கல்யாணம் வேணான்னு சொல்ல....

கல்யாணி,

கல்யாணம் பிடிக்காமதான்

கல்யாணமே வேணான்னு சொல்றதா நினைத்து,

கல்யாணி அப்பா

கல்யாணசுந்தரம்

கல்யாணியின்

கல்யாணத்துக்குக்

கல்யாணம் வேணான்னு

கல்யாணராமன் என்ற மாப்பிள்ளையைப் பார்க்க,

கல்யாணி

கல்யாணமே வேணான்னு

கல்யாணராமன்கிட்ட சொல்ல...

கல்யாணி அப்பா

கல்யாணி

கல்யாணத்தை

எப்படி நடத்துவார்?

நல்லா யோசிங்க...

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 9 ஜன 2018