மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ட்விட்டர்: மோதிய முதல்வர்கள்!

ட்விட்டர்: மோதிய முதல்வர்கள்!

தங்களுடைய மாநிலம்தான் வளர்ச்சியில் சிறந்தது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது. பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களைப் பலப்படுத்துவதும் பிரசாரத்தில் ஈடுபடுவதுமாக இயங்கிவருகின்றன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

அவரை வரவேற்கும் விதமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி ட்விட்டர் அக்கவுன்ட்டுக்கே மென்ஷன் செய்து, ‘உங்களை எங்கள் மாநிலத்துக்கு வரவேற்கிறேன். எங்களிடம் நிறைய நீங்கள் கற்றுக்கொள்ளலாம். எங்கள் மாநிலத்தின், இந்திரா கேன்டீன் மற்றும் ரேஷன் கடைகளுக்குப் போய் பாருங்கள். உங்கள் மாநிலத்தில் உணவு பற்றாக்குறையால் இறப்பு பிரச்னை இருக்கிறதே... அதை சரி செய்ய இது உதவக்கூடும்’ என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் சித்தராமையாவை மென்ஷன் செய்த யோகி ஆதித்யநாத், ‘உங்கள் வரவேற்புக்கு நன்றி. உங்கள் ஆட்சி காலத்தில்தான் கர்நாடகாவில் அதிக விவசாயிகள் இறந்ததாகக் கேள்விப்பட்டேன். சொல்ல மறந்துவிட்டேனே... நேர்மையான பல அரசு அதிகாரிகள் உங்கள் ஆட்சியில் இறந்துள்ளனர். பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உ.பி முதல்வர் என்ற வகையில், உங்கள் ஆட்சியில் மக்கள்படும் கஷ்டங்களையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தவிர்த்துவிட்டு ஆட்சியமைக்க முயல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 9 ஜன 2018