மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ஆங்கிலத்துக்குத் தடை!

ஆங்கிலத்துக்குத் தடை!

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகையில், ஈரான் நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை கவுன்சலின் தலைவர் மெஹ்தி நவித் ஆதம் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அரசு மற்றும் அரசு சாரா ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பது குழந்தைகளிடம் மேற்கத்தியக் கலாசார ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும். மேலும், இது சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது. இதனால், ஈரானியக் கலாசாரம் படிப்படியாகக் குறையவும் வாய்ப்புள்ளது. அதனால், ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 7ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

12 வயது முடிந்த பிறகே மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்படும். சில குழந்தைகள் பள்ளிக்குப் பின்னர் பிறமொழி கற்றுதரும் மையங்களுக்குச் சென்று ஆங்கிலம் கற்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் உயர் கல்வியின்போதுதான் ஆங்கிலம் கற்று கொள்கின்றனர்.

2016ஆம் ஆண்டு, ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி, “இது வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான எதிர்ப்பு அல்ல. ஆனால், குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும், வெளிநாட்டுக் கலாசாரத்தை ஊக்குவிப்பதாகும்” எனக் கூறினார்.

இதற்கு முன்பு மலட்டுத்தன்மை, பித்தப்பையில் கல், தொற்றுநோய், புற்றுநோய் உள்ள பெண்களுக்குப் பள்ளிகளில் ஆசிரியர் பணி இல்லை. மேலும், பார்வை கோளாறு, மாறு கண் இருந்தால் ஓவிய ஆசிரியராகப் பணியாற்ற முடியாது. 20 பற்களுக்குக் குறைவாக இருப்பவர்களுக்கும், முகத்தில் மரு, மச்சம் முடி உள்ளவர்களுக்கும் ஆசிரியர் பணி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 9 ஜன 2018