மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு அடை!

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு அடை!

மரவள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடக் கூடாது; மந்தத் தன்மையும் பசியின்மையும் ஏற்படும். ஆனால், அதில் உள்ள வைட்டமின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இதர சத்துகளைப் பெற அவ்வப்போது தனியாக வாங்கி சாப்பிடுவதோ அல்லது சமையலில் சேர்த்துக்கொள்வதோ நலம். இன்று நாம் மரவள்ளிக்கிழங்கில் அடை செய்து அசத்தலாம். வாருங்கள்

தேவையான பொருள்கள்:

அரை வேக்காடு வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி, காய்ந்த மிளகாய் – காரத்துக்கேற்ப, பூண்டு - 5 பல், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, கேரட் துருவல் – சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

பருப்பு வகைகளை ஊற வைக்கவும். ஊறியதும் அவற்றுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும். பிறகு அதில் வேக வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். அத்துடன் உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடைகளாகச் சுட்டெடுக்கவும். வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் பரிமாறவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி.

கீர்த்தனா ஜோக்ஸ்:

“ஏம்பா! இப்பதானே ஓர் அடி ஸ்கேல் வாங்கினே... எதுக்கு மறுபடியும் அரை அடி ஸ்கேல் கேட்கறே?”

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 9 ஜன 2018