மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

மத்திய அரசு அச்சகத்துக்கு மூடு விழா!

மத்திய அரசு அச்சகத்துக்கு மூடு விழா!

கோவையிலுள்ள மத்திய அரசு அச்சகம் வரும் ஜனவரி 15ஆம் தேதியிலிருந்து மூடப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம். இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் 17 அச்சகங்கள் இயங்கிவருகின்றன. கோவை பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள பிரஸ் காலனியில் செயல்பட்டுவரும் அச்சகமும் அவற்றுள் ஒன்று. இங்கு தபால் துறையில் பயன்படுத்தப்படும் கார்டுகள், கடிதங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வந்தன.

இந்த அச்சகத்துக்கு சொந்தமாக, சுமார் 132 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. இந்த வளாகத்தில் ரேஷன் கடை, பழங்குடியினருக்கான பள்ளி, ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் தபால் நிலையம் ஆகியவை உள்ளன. இந்த நிலம் மற்றும் சொத்துகளை மத்திய அரசு விற்க முடிவு செய்திருப்பதாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

கோயம்புத்தூரில் இருப்பதைப் போன்றே கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இயங்கிவரும் அச்சகங்களை மூடிவிட்டு, இங்கு பணிபுரியும் ஊழியர்களை மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்றத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு எதிராகச் சில கட்சியினரும் அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். ஆனால், மத்திய அரசின் அச்சகத் துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 8) கோவையில் செயல்பட்டுவரும் மத்திய அரசு அச்சகம் வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் மூடப்படும் என்று அதிகாரபூர்வமாகத் தகவல் வெளியானது. இந்தியா முழுவதுமுள்ள 12 அச்சகங்கள் மூடப்பட்டு, மீதமுள்ள 5 அச்சகங்களோடு அவை இணைக்கப்படும் என்றும், கோவை அச்சக ஊழியர்கள் நாசிக்கில் உள்ள அச்சகத்தில் பணியில் சேரலாம் என்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று (ஜனவரி 8) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் லாபத்தில் இயங்குகிற ஓர் அச்சகத்தை மூடிவிட்டு, இன்னொரு மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்குகிற அச்சகத்தை நவீனப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 9 ஜன 2018