மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

சென்னை வாசிக்கிறது நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி!

சென்னை வாசிக்கிறது நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி!

சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டுச் சென்னை வாசிக்கிறது என்ற பெயரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று புத்தகம் வாசித்தனர்.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக 41ஆவது புத்தகக் காட்சி சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சென்னை வாசிக்கிறது என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு புத்தகங்களைப் படித்தனர். அதில், தினமும் ஒரு மணி நேரம் அனைத்து மாணவர்களும் பாட நூல்களைத் தவிர மற்ற நூல்களையும் படிக்க உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும், புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் சிறப்பு போட்டி ஆகியவை நடத்தப்படவுள்ளன. விருப்பம் உள்ள மாணவர்கள், துணைத்தலைவர் பெ.மயில்வேலன் (பபாசி, வனிதா பதிப்பகம்) 9884041948 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு தங்களுடைய பெயர், பள்ளி, கல்லூரி, செல்பேசி, மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 9 ஜன 2018