மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

உயிருடன் இருந்தவருக்குப் பிரேதப் பரிசோதனை!

உயிருடன் இருந்தவருக்குப் பிரேதப் பரிசோதனை!

‘விபத்தில் சிக்கி உயிருடன் இருந்தவரை இறந்துவிட்டார் எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் பிரேதப் பரிசோதனை செய்துள்ளது’ என அவருடைய உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் மூலே (வயது 23) என்பவருக்கு நேற்று முன்தினம் (ஜனவரி 7) சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரவீனைக் கர்நாடக மருத்துவ அறிவியல் மையத்துக்கு (கே.ஐ.எம்.எஸ்) சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அம்மருத்துவமனை அதிகாரிகள் பிரவீன் இறந்து விட்டார் எனக் கூறி பிரேதப் பரிசோதனை கூடத்துக்கு அவரது உடலை அனுப்பியுள்ளனர்.

எனினும், மருத்துவமனைக்கு வந்த பிரவீனின் உறவினர்கள் அவரது உடலைப் பரிசோதித்துள்ளனர். இதில் பிரவீனின் இதயத்துடிப்பு சீராக இருந்துள்ளதாக அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவரிடம் கூறியுள்ளனர். ஆனால், 7 மணி நேரம் வரை மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் பிரவீன் வைக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரவீனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கே.ஐ.எம்.எஸ். முன்புகூடி தவறு செய்த மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினார்கள்.

“பிரவீன் பிரேதப் பரிசோதனை கூடத்தில் இருந்தபோது அவரது உடலில் அசைவு இருந்தது. ஆனால், பிரவீன் உயிருடன் இருக்கிறார் எனக் கூறியும், அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர்” என பிரவீனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 9 ஜன 2018