மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

அப்செட்டான கீர்த்தி சுரேஷ்

அப்செட்டான கீர்த்தி சுரேஷ்

‘என்னை ரசிகர்கள் கிண்டல் செய்தது வருத்தம் அளித்தது’ என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் சாமி ஸ்கொயர் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். இதுதவிர தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் பிசியாக நடித்துவருகிறார். தனது திரையுலக அனுபவம் குறித்து ஸிஃபி இணையதளப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

“நான் ‘சாமி-2’ படத்துக்குக் கூடுதலாக சம்பளம் கேட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. வழக்கமாக வாங்கும் சம்பளத்தைத்தான் கேட்டேன். அந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஹரி என்னிடம் கூறியபோது, ‘சாமி-2’ படத்தில் த்ரிஷா இருக்கிறாரா என்று மட்டுமே கேட்டேன். இதை தவறாகப் புரிந்து கொண்டார்கள்” என்றார்.

‘சண்டக்கோழி-2’ படத்திலும் நடித்து வரும் அவர், “அந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் பிடித்துவிட்டது. உடனே அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் தேசிய விருது பெற்றார் என்பதால் அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

கீர்த்தி தெலுங்கில் நடித்துள்ள அஞ்ஞாதவாசி திரைப்படம் வெளிவர இருக்கிறது. கடந்த மாதம் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவுக்கு கீர்த்தி மற்றும் படத்தின் மற்றொரு நாயகி அனு இம்மானுவேல் இருவரும் சேலை கட்டி வந்தனர். இதில் கீர்த்தியின் கெட்-அப் கேலிக்குள்ளானது.

இதுகுறித்து தெரிவித்த கீர்த்தி, “அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குச் சேலைக்கட்டி, கொண்டை போட்டு வித்தியாசமான தோற்றத்தில் வந்தேன். ஆனால், அதை சிலர் கிண்டல் செய்து விமர்சித்தனர். இது மிகவும் வருத்தம் அளித்தது. இந்த கெட்-அப்பை பலரும் பாராட்டினர். ஆனால், அதை ரசிகர்கள் கிண்டல் செய்தது என் மனதைக் காயப்படுத்தியது” என்று தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 ஜன 2018