மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

செவிலியர்களுக்குப் படிப்படியாக பணி நிரந்தரம்!

செவிலியர்களுக்குப் படிப்படியாக பணி நிரந்தரம்!

‘அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 9,533 செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடிப்படை ஊதியத்தில் பணியாற்றும் 11 ஆயிரம் செவிலியர்களுக்குத் தொகுப்பு ஊதியமாக 7,700 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த நவம்பர் மாதம் 3,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து சென்னையைச் சேர்ந்த கணேஷ் என்பவர் செவிலியர்கள் போராட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 8) இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒப்பந்த செவிலியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத் துறை முதன்மை செயலாளரைத் தலைவராகவும், ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநரகப் பிரதிநிதியைச் செயலாளராகவும் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் நிதித்துறை, மாநிலச் சுகாதார சங்கம், மருத்துவப் பணிகள் இயக்குநரகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் 9,533 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவார்கள். இதையடுத்து அரசு வரும் நிதியாண்டு இறுதிக்குள் 200 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இரண்டு செவிலியர் சங்கங்களும் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளன. அதில் தங்களது ஒப்பந்த நியமனம், பணி நிரந்தரம் செய்வதற்கான கோரிக்கை, அடிப்படை ஊதியமான 18 ஆயிரம் கூட வழங்கப்படவில்லை. மேலும், தொகுப்பு ஊதியம் ரூ.7,700 மட்டும் அளிக்கப்படுவதால் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் தங்கள் போராட்டத்துக்கான காரணங்கள் குறித்தும் விளக்கியுள்ளன.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 ஜன 2018