மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஆளுநர் உரை: மத்திய அரசு தயாரித்ததா?

ஆளுநர் உரை: மத்திய அரசு தயாரித்ததா?

ஆளுநர் உரையில் ஜிஎஸ்டிக்குப் பெரிய பாராட்டே வழங்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையைத்தான் ஆளுநர் படித்தாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று (ஜனவரி 8) கூடிய நிலையில், ஆளுநர் பன்வாரிலாலின் உரை "அரசுக்கான வருவாய் குறைந்த போதிலும், தமிழக அரசு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுகிறது. ஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழக அரசு செயல்படுகிறது” என்ற ரீதியில் தமிழக அரசைப் பாராட்டும் விதமாகவே அமைந்திருந்தது. இதனைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

ஆளுநர் உரை குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போன்று இருந்தது. உரையில் அரசின் வருவாய் குறைந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அறிவித்துள்ள திட்டங்களை எப்படி நிறைவேற்றுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. திட்டங்களை நிறைவேற்ற நிதியை எப்படிக் கொண்டு வரப்போகிறார்கள்? ஒருவேளை திட்டங்களை நிறைவேற்ற ஏதாவது மந்திரக்கோல் வைத்துள்ளனரா என்ற கேள்வியும் எழுகிறது" என்று குற்றம்சாட்டினார்.

"ஆளுநர் உரையில் அரசின் கடன் சுமை குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தொழில் வளர்ச்சியை எப்படி சரிசெய்வது என்பது குறித்தும் ஆளுநர் உரையில் எந்த விளக்கமும் குறிப்பிடப்படவில்லை. வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் முயற்சியில் எப்படி ஈடுபடப்போகிறோம் என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை. விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்தும், அதனை நிறைவேற்ற அரசு என்ன செய்யப்போகிறது என்றும் எதுவும் கூறவில்லை" என்றும் தெரிவித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018