மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

நீதிமன்ற அனுமதியின்றிப் பணி நீக்கம் செய்யக்கூடாது!

நீதிமன்ற அனுமதியின்றிப் பணி நீக்கம் செய்யக்கூடாது!

உயர் நீதிமன்ற அனுமதியில்லாமல் போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 நாட்களாகப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். நாளை குடும்பத்துடன் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். விருதுநகரில் போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. இந்த வழக்கில் தொழிற்சங்கங்களின் கருத்தைக் கேட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் ‘என்று கூறினார்.

இதை விசாரித்த நீதிமன்றம் தொழிலாளர்களின் பணத்தை ஏன் வழங்கவில்லை உடனே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு அரசு தரப்பில் படிப்படியாக பணத்தை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும், பணத்தைக் கொடுப்பதில் தாமதம் செய்வதை ஏற்க முடியாது, பணம் இல்லாவிடில் கடன் வாங்கிக் கொடுங்கள் என்றும் கூறியுள்ளது.

மேலும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவில்லை என்பதற்காக பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவது சரியா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று கூறியுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 8 ஜன 2018