மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

மக்களை அழ வைக்கும் வெங்காயம்!

மக்களை அழ வைக்கும் வெங்காயம்!

சமீப காலமாகவே அதிகரித்து வரும் வெங்காயம் விலையால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், அறுவடை முடிந்து புதிய வெங்காயம் சந்தைகளுக்கு வரவிருப்பதால் இன்னும் இரண்டு வாரங்களில் வெங்காயம் விலை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பருவத்தில் வெங்காயம் இருப்பு குறைவாக இருந்ததாலும் நடப்பு பருவத்தில் வெங்காய அறுவடை குறைந்ததாலும், சந்தையில் விநியோகம் குறைந்து வெங்காயம் விலை உயரத் தொடங்கியது. ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையான மகாராஷ்டிர மாநில லாசல்கான் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 35க்கும் மேல் இருந்தது. இந்த விலை உயர்வு நாடு முழுவதும் பெருகியது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய உற்பத்திப் பகுதிகளான மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் வெங்காய அறுவடை தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக், அகமதாபாத், புனே மற்றும் சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் அறுவடையாகும் வெங்காயம் அடுத்த வாரம் சந்தைகளுக்கு வரத் தொடங்கும்.

சந்தையில் ஏற்பட்ட விநியோகத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு டன் ஒன்றுக்கு 850 டாலரைக் (கிட்டத்தட்ட ரூ.53,995) குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக மத்திய அரசு நிர்ணயித்தது. 2017 டிசம்பர் வரை விதிக்கப்பட்ட இந்தக் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையானது பின்னர் ஜனவரி 20 வரையிலான மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. எனினும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.55 வரையில் இருந்தது. குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிப்பு போன்ற அரசின் நடவடிக்கைகளால் ஜனவரி முதல் வாரத்தில் வெங்காயத்தின் விலை 35 ரூபாயாக் குறைந்தது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 8 ஜன 2018