மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

நிலக்கரி உற்பத்தியில் புதிய இலக்கு!

நிலக்கரி உற்பத்தியில் புதிய இலக்கு!

பொதுத் துறை நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா 2019ஆம் ஆண்டில் 630 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஜனவரி 5ஆம் தேதி மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “2018-19ஆம் நிதியாண்டில் கோல் இந்தியா 5 சதவிகித வளர்ச்சியுடன் 630 டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2017-18) ஜனவரி 1 வரை 408.6 மில்லியன் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 385.6 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுக்கு நிலக்கரியின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து நிலக்கரி உற்பத்தி இலக்கை கோல் இந்தியா 2017-18ஆம் நிதியாண்டில் 600 மில்லியன் டன்னாக உயர்த்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

2016-17ஆம் நிதியாண்டில் 554 டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யவும் கோல் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலைப்படி கோல் இந்தியா அதிகபட்சமாக ஆண்டொன்றுக்கு 908 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 2020ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட வேண்டுமானால் கோல் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த நிதியாண்டுக்கான 630 டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய தினசரி உற்பத்தி 2 மில்லியன் டன்னுக்கும் கூடுதலாக இருக்க வேண்டும் குறிப்பிடத்தக்கது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 8 ஜன 2018