மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பாபா முத்திரையில் புதிய சர்ச்சை!

பாபா முத்திரையில் புதிய   சர்ச்சை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்தும் ‘பாபா’ முத்திரை தங்களது நிறுவனத்தின் லோகோ போல இருப்பதாக மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்தியேகமான முத்திரை ஒன்றைப் பயன்படுத்திவருகிறார். 2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே ரஜினிகாந்த் பயன்படுத்தி இருந்தார். யோக சாஸ்திரத்தில் இதை அபான முத்திரை என்று சொல்வார்கள். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உடலைச் சுத்தம் செய்யவும் இது பயன்படும் என்று சொல்லப்படுகிறது. இது பாபா படத்தில் வந்ததால் பாபா முத்திரை என்று பரவலாக வழங்கப்படுகிறது.

இந்த முத்திரை மிகவும் புகழ்பெற்ற முத்திரையாக ரஜினி ரசிகர்களிடையே விளங்குகிறது. இந்த முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டியுப்பதுடன் அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை தயாரித்து விநியோகித்துவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த முத்திரை, தங்களது நிறுவனத்தின் லோகோ போல இருப்பதாகக் கூறி, ‘வாக்ஸ்வெப்’ எனப்படும் சமூக நெட்வொர்க் செயலியை வடிவமைத்துள்ள மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கூறி பீதியைக் கிளப்பி வருகிறது. “ஒரே சின்னத்தை வேறு நிறுவனமோ அல்லது பிராண்டோ வைத்திருந்தால் அது பெரிய பிரச்சினையல்ல. ஆனால் சமூக ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் பிரத்தியேகமான அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றுக்குப் பெரிய மக்கள் கூட்டம் உண்டு. அவை ஒரே மாதிரியான சின்னங்களைப் பயன்படுத்துவது குழப்பத்தை உருவாக்கும்.

அவரின் முத்திரையும் எங்கள் சின்னமும் கட்டை விரலில் மட்டுமே சிறிய மாற்றத்தைக் கொண்டுள்ளது. இதனால் எங்களின் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் நாங்கள் ரஜினிகாந்தை ஆதரிக்கிறோமா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ரஜினிகாந்திற்குக் கடிதம் எழுதியுள்ளோம் ஆனால் அது குறித்து எந்தப் பதிலும் வரவில்லை” என்று அதன் நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 8 ஜன 2018