பழனி கிரிவலப் பாதையில் கேமரா!

பழனி கிரிவலப் பாதையில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகத்திற்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், பழனி மலை மற்றும் கிரிவலப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.மேலும், பழனி கோயிலை சுற்றி பாதுகாப்புக்காக சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த வேண்டும் என கூறியிருந்தார்.