மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பறவைக் காய்ச்சல்: நாமக்கலில் மருத்துவ குழு!

பறவைக் காய்ச்சல்: நாமக்கலில் மருத்துவ குழு!

கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதிரொலியாகத் தமிழகத்தில் நாமக்கலில் உள்ள கோழி பண்ணைகளைக் கண்காணிக்க 97 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பரவிவரும் பறவைக் காய்ச்சலால் தமிழக எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரு பகுதியில் சமீபத்தில் நாட்டுக்கோழி ஒன்று உயிரிழந்தது. அதைத்தொடர்ந்து, ஏராளமான கோழிகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. இதன் காரணமாக கோழிகளை ஆய்வு செய்ததில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்துபெங்களூர், தாசரஹள்ளி மற்றும் எலஹங்கா ஆகிய பகுதிகளில் உள்ள 40 க்கும் மேற்பட்ட கோழிக்கடைகள் சீல் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழக கால்நடை பராமரிப்பு துறையினர் கர்நாடகாவில் இருந்து கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தமிழக எல்லைக்குள் நுழையத் தடை விதித்துள்ளனர்.

மேலும் இம்மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு மருத்துவர்கள், கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களுக்கு கிருமி நாசினி அடித்த பின்னர் தான் நீலகிரிக்குள் அனுமதிக்கிறார்கள்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 8 ஜன 2018