தமிழகத்தில் 584 ஏ.டி.எம். மோசடி வழக்குகள்!

தமிழ்நாட்டில் கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணையதள வங்கியியல் ஆகியவற்றின் வழியாக மோசடி செய்ததாக 584 ஏ.டி.எம். மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானன் எழுத்துமூலம் பதில் அளித்திருக்கிறார்.
"நாடு முழுவதும் கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணையதள வங்கியியல் ஆகிவற்றின் வழியாக மோசடி செய்ததாக கடந்த 3 ஆண்டுகளில் 3,433 வழக்குகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்குகளில் 1,003 வழக்குகளுடன் மராட்டியம் முதலிடத்திலும், 619 வழக்குகளுடன் அரியானா 2வது இடத்திலும் உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் 584 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.
மிகக்குறைந்த எண்ணிக்கையாக தலா 2 வழக்குகள் இமாசல பிரதேசத்திலும், சிக்கிமிலும் பதிவாகி உள்ளன" என்று அல்போன்ஸ் கன்னதானன் தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாட்டில் 584 ஏ.டி.எம். மோசடி வழக்குகள் பதிவு!