மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியை ஆஸ்திரேலியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடத்தப்படும் ஆஷஸ் தொடர் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அதில் முதல் மூன்று போட்டிகளையும் வென்று ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது. நான்காவது போட்டியில் அலிஸ்டர் குக் நிலைத்து நின்று விளையாடி இரட்டை சதம் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. கடைசி மற்றும் 5ஆவது போட்டி சிட்னியில் கடந்த வியாழனன்று (ஜனவரி 4) தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 346 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 649 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரை சதம் அடித்தார். ஆனால் அவரும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 58 ரன்கள் சேர்த்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாகப் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பேட் கம்மின்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தத் தொடரில் மொத்தமாக 687 ரன்களை சேர்த்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தொடர் நாயகன் விருது பெற்றார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 8 ஜன 2018